ECONOMY

இன்று காலை முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து சீராக  இருந்தது

13 நவம்பர் 2023, 9:14 AM
இன்று காலை முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து சீராக  இருந்தது

கோலாலம்பூர், நவம்பர் 13 - கிள்ளான் பள்ளத்தாக்கு நோக்கிய முக்கிய நெடுஞ்சாலைகளில் இன்று காலை 10 மணி நிலவரப்படி போக்குவரத்து சீராகவும் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மலேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், சினவாங்கிலிருந்து போர்டிக்சன் வரையிலான வடக்கு-தெற்கு விரைவுச் சாலையில் அதிக போக்குவரத்து நெரிசல் காரணமாக இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு  நெரிசல் ஏற்பட்டது.

"வடக்கு, கிழக்கு கடற்கரை மற்றும் தெற்கில் இருந்து கிள்ளான் பள்ளத்தாக்கு நோக்கி செல்லும் மற்ற வழிகளில், குறிப்பிடத்தக்க நெரிசல் ஏதுமின்றி, அனைத்தும் கட்டுப்பாட்டில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிள்ளான் பள்ளத்தாக்கில் இருந்து வெளியேறும் பாதைகளுக்கும் இது பொருந்தும்,” என்று பெர்னாமாவைத் தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.

தீபாவளி விடுமுறை முடிந்து  மக்கள் தங்கள் வீடுகளுக்கு   கிள்ளான் பள்ளத்தாக்கு  நோக்கி திரும்ப தொடங்குவதால் இன்று பிற்பகலில் போக்குவரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எந்தவொரு கடுமையான நெரிசலையும் தவிர்க்க நெடுஞ்சாலை பயனர்கள் பரிந்துரைக்கப்பட்ட பயண நேரங்களைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப் படுவதாக, பேச்சாளர் மேலும் கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.