ECONOMY

ஐந்து செகி ஃபிரெஷ் கிளைகளில் நாளை ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை

10 நவம்பர் 2023, 2:13 AM
ஐந்து செகி ஃபிரெஷ் கிளைகளில் நாளை ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை

ஷா ஆலம், நவ 10- சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தினால் பி.கே.பி.எஸ்.) நடத்தப்படும் ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை நாளை சனிக்கிழமை  செகி ஃப்ரெஷ் பேராங்காடிகளின் ஐந்து கிளைகளில் நடத்தப்படும்.

கோழி, மீன், அரிசி உள்ளிட்ட சமையல் பொருள்களை மலிவான விலையில் விற்பனை செய்யும் இந்த இயக்கம் தெலுக் பங்ளிமா காராங் (கோல லங்காட்), சுங்கை ஊடாங் (கிள்ளான்), பண்டார் தாசேக் புத்ரி (ரவாங்), ஆகிய இடங்களில் காலை 8.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும்.

உள்நாட்டு வர்த்தக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சின் ஆதரவுடன் சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம் ஏற்பாடு செய்துள்ள மலிவு விற்பனை கோல குபு பாரு (உலு சிலாங்கூர்) மற்றும் செத்தியா மயூரி (காஜாங்) கிளைகளிலும் நடைபெறவுள்ளது.

வாழ்க்கைச் செலவின அதிகரிப்பினால் சிரமத்தை  எதிர்நோக்கியிருக்கும் மக்களுக்கு குறிப்பாக பி40 தரப்பினருக்கு உதவும் நோக்கில் சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து இந்த திட்டத்தை செகி ஃப்ரெஷ் நிறுவனம் அமல்படுத்தியுள்ளது.

மலிவு விற்பனைத் திட்டத்தை விரிவுபடுத்தும் நோக்கில் பி.கே.பி.எஸ். மற்றும் செகி ஃப்ரெஷ் பேரங்காடிக்கும் இடையே கடந்த ஜூலை மாதம் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த மலிவு விற்பனை நடத்தப்படுகிறது.

சந்தையை விட குறைவான விலையில் பொருள்களை விற்பனை செய்வதன் மூலம் மக்களுடன் அணுக்கமான நட்புறவை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக செகி ஃப்ரெஷ் பேரங்காடி தனது பேஸ்புக் பதிவில் கூறியது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.