RS-2: சிலாங்கூரின் வளர்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் சமமாக இருக்க வேண்டும் – பொருளியல் நிபுணர்

2 செப்டெம்பர் 2026, 4:02 AM
RS-2: சிலாங்கூரின் வளர்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் சமமாக இருக்க வேண்டும் – பொருளியல் நிபுணர்

ஷா ஆலம், செப்.2 : ஒரு மாநிலத்தின் வெற்றியை பொருளாதார வளர்ச்சியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடக்கூடாது.

மாறாக, அங்குள்ள எந்தவொரு பகுதியும் பின்தங்கிவிடாத நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் வளர்ச்சி சமமாகப் பகிரப்பட வேண்டும்.

இதனை துங்கு அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழகத்தின் (UTAR) பொருளியல் பேராசிரியர் டாக்டர் வோங் சின் யோங் தெரிவித்துள்ளார்.

சிலாங்கூரில் உள்ள ஒன்பது மாவட்டங்களும் வெவ்வேறு ஆற்றல்களையும் வளர்ச்சி நிலைகளையும் கொண்டுள்ளன என்றார் அவர்.

எனவே 'இரண்டாவது சிலாங்கூர் திட்டத்தின்' (RS-2) கீழ் மேற்கொள்ளப்படும் அணுகுமுறையானது ஒவ்வொரு பகுதிகளின் பலம் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட வேண்டும்.

சில மாவட்டங்களுக்கு புதிய பொருளாதாரத் துறைகளை அறிமுகப்படுத்துவதைவிட, ஏற்கெனவே உள்ள தங்களது பலத்தை அடிப்படையாகக் கொண்டு வளர்ச்சியை முன்னெடுப்பது சிறந்ததாக இருக்கலாம் என அவர் தெரிவித்தார்.

இதன் மூலம் மாநிலத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியுடன், மாவட்டங்களுக்கு இடையிலான வளர்ச்சி இடைவெளியையும் குறையும். இதன் வழி வளர்ச்சியின் பலனை அனைத்து மக்களும் சமமாக பெறுவதற்கான வாய்ப்பை உருவாக்க முடியும்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.