ECONOMY

மக்கள் நலன்  தினத்தை மலிவு விற்பனையுடன் கொண்டாட பொதுமக்களுக்கு  அழைப்பு - கோம்பாக்

27 அக்டோபர் 2023, 12:36 PM
மக்கள் நலன்  தினத்தை மலிவு விற்பனையுடன் கொண்டாட பொதுமக்களுக்கு  அழைப்பு - கோம்பாக்

ஷா ஆலம், அக் 27: இந்த வார இறுதி  கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் ஏற்பாடு செய்துள்ள பல்வேறு சுவாரசியமான நடவடிக்கைகள் மக்கள் நலன் தினத்துடன், மலிவு விற்பனையுலும் கலந்துக்கொள்ள  பொதுமக்கள் அழைக்கப்படுகிறார்கள்.

இந்நிகழ்ச்சி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தாமான் ஸ்ரீ கோம்பாக்கில் உள்ள டேவான் பெரிங்கினில் நடைபெறும் என்று செலாயாங் நகராண்மை கழகம் (எம்.பி.எஸ்) முகநூல் மூலம் தெரிவித்துள்ளது.

 

"அந்நிகழ்வில் இலவசச் சுகாதாரப் பரிசோதனைகள், ஏஹ்சான் ரஹ்மா விற்பனை, பல்வேறு முதலாளிகளின் திறந்த நேர்காணல் பெர்காசோவின் திறந்த தொழில் கண்காட்சி, ஸ்கீம் மெஸ்ர ஊசிய எமாஸ் மற்றும் ஸ்கீம் ஆயர் டாருல் எஹ்சான் நீர் திட்டத்தின் மூலம் இலவச நீர் பதிவு (SADE) ஆகியவை இடம்பெறும்.

 

"இல்லத்தரசிகள் மற்றும் கிக் தொழிலாளர்களுக்கான பெர்காசோவின் திட்டம் பற்றிய விளக்கங்கள், கோமஸ் பாலிகிளினிக்கின் இலவச இதய பரிசோதனைகள் மற்றும் யாயாசான் வாரிசான் அனாக் சிலாங்கூர் (யாவாஸ்) பதிவு ஆகியவற்றுக்கான  வருகையாளர்களும் ,"பங்கெடுத்துக் கொள்ளலாம் என்று அவர் கூறினார்.

மேலும், போட்டி விளையாட்டுகள், குழந்தைகளுக்கான வண்ணம் தீட்டும் போட்டிகள், கண்காட்சி கவுண்டர்கள் மற்றும் அஸ்னாஃப் விற்பனை போன்ற பிற நடவடிக்கைகள் நடைபெறும்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.