ECONOMY

நான்கு  செகி ஃப்ரெஷ் கிளைகளில்  நாளை எஹ்சான் ரஹ்மா விற்பனை

22 செப்டெம்பர் 2023, 8:35 AM
நான்கு  செகி ஃப்ரெஷ் கிளைகளில்  நாளை எஹ்சான் ரஹ்மா விற்பனை

ஷா ஆலம், செப்டம்பர் 22: சிலாங்கூர் வேளாண்மை மேம்பாட்டுக் கழகம் (பிகேபிஎஸ்) மற்றும் செகி ஃப்ரெஷ் சூப்பர் மார்க்கெட்டுடன் இணைந்து செயல்படும், அடிப்படைப் பொருட்களை  மலிவான  விலையில் விற்கும்  திட்டம் நாளை நான்கு இடங்களில் நடைபெறும்.

Ehsan Rahmah Sale (JER)   பண்டார் தாசிக் புத்திரி, சுங்கை பெசார், கோம்பாக் மற்றும் அந்தரா கபி ஆகிய இடங்களில் உள்ள பல்பொருள் அங்காடி கிளைகளில் நடைபெறும்  என்று பிகேபிஎஸ் தெரிவித்துள்ளது.

"உள்ளூர் சமூகத்தின், குறிப்பாக B40 குழுவின் சுமையை குறைக்க,  சந்தை விலையை விட மிகக் குறைந்த விலையில் அடிப்படைத் தேவைகளை  வழங்க  நாங்கள் ஒன்றாகச் செயல் படுகிறோம்.

இந்த சிறப்பு விளம்பரத்தை தவறவிடாதீர்கள் என முகநூல் மூலம் தெரிவித்துள்ளது. சிலாங்கூர் முழுவதும் உள்ள செகி ஃப்ரெஷ் கிளைகளின் 55 வளாகங்களில் விற்பனை இடங்கள்  மற்றும் தளவாடங்களை வழங்குவது உட்பட JER திட்டத்தை செயல்படுத்து வதற்கு பிகேபிஎஸ்  இன் ஒரு மூலோபாய பங்காளியாக சூப்பர் மார்க்கெட் நியமிக்கப்பட்டது

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.