ECONOMY

பெர்மாத்தாங் தொகுதியில் 13 சோலார் விளக்குகள் பொருத்தப்பட்டன

4 ஜூலை 2023, 12:31 PM
பெர்மாத்தாங் தொகுதியில் 13 சோலார் விளக்குகள் பொருத்தப்பட்டன

ஷா ஆலம், ஜூலை 4- சூரிய ஒளியில் இயங்கும் 13 சோலார் எல்.இ.டி. விளக்குகளைப் பெர்மாத்தாங் தொகுதியில் பொருத்தும் பணி நேற்று முழுமை பெற்றது.

அந்த விளக்குகள் பெஸ்தாரி ஜெயா, பத்தாங் பெர்ஜூந்தையில் உள்ள ஜாலான் இல்மு 1/16 ஏ, ஜாலான் ஹாஜி முகமது, கோல சிலாங்கூர் உஜோங் பெர்மாத்தாங், ஜாலான் தெருசுன் கெமிலாங், ஜாலான் செதஞ்சோங், தஞ்சோங் காராங் மற்றும் கோல சிலாங்கூரின் ஜாலான் குன்சி ஆயர் 2 ஆகிய இடங்களில் பொருத்தப்பட்டன.

மாநிலச் சட்டமன்றம் கடந்த மாதம் 23ஆம் தேதி கலைக்கப்படுவதற்கு முன்பாக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியைக் கொண்டு இந்த விளக்குகள் பொருத்தப் பட்டதாக தொகுதிக்கான நடப்பு சட்டமன்ற உறுப்பினர் ரோஸானா ஜைனால் அடிபிடின் கூறினார்.

பெர்மாத்தாங் தொகுதியில் 13 எல்.இ.டி. விளக்குகள் வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளன. மாநில அரசின் நிதி ஒதுக்கீட்டின் வாயிலாக இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டது என்று அவர் சொன்னார்.

இந்த விளக்குகளை பொருத்துவதற்கான நிதி மாநில சட்டமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னதாகவே ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டது. இன்று அனைத்து விளக்குகளும் பொருத்தப்பட்டு விட்டது என்றார் அவர்.

சாலையைப் பயன்படுத்துவோரின் பாதுகாப்புக்காக மாநிலம் முழுவதும் சோலார் விளக்குகளை பொருத்துவதற்கு 50 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி கூறியிருந்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.