ECONOMY

கிள்ளான் பள்ளத்தாக்கில் இருந்து வெளியேறும் நெடுஞ்சாலைகளில் சீரான போக்குவரத்து

29 ஜூன் 2023, 4:32 AM
கிள்ளான் பள்ளத்தாக்கில் இருந்து வெளியேறும் நெடுஞ்சாலைகளில் சீரான போக்குவரத்து

கோலாலம்பூர், ஜூன் 29- இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, கிள்ளான்

பள்ளத்தாக்கிலிருந்து வெளியேறும் முக்கிய நெடுஞ்சாலைகளில்

வாகனப்போக்குவரத்து சீராகக் காணப்பட்டது.

வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் தாப்பா முதல் கோப்பெங் வரையிலான

பகுதியில் மட்டுமே போக்குவரத்து நெரிசல் காணப்படுவதாக மலேசிய

நெடுஞ்சாலை வாரியம் (எல்.எல்.எம்.) கூறியது.

கிழக்குக் கரை மாநிலங்களுக்குச் செல்லும் கோம்பாக் டோல் சாவடி,

கிழக்குக் கரை நெடுஞ்சாலை 1 மற்றும் கிழக்குக் கரை நெடுஞ்சாலை 2

ஆகியவற்றில் போக்குவரத்து சீராக உள்ளதாக எல்.எல்.எம். பேச்சாளர்

பெர்னாமாவிடம் தெரிவித்தார்.

சொந்த ஊர்களுக்கு திரும்பும் வாகனமோட்டிகளின் வசதிக்காக

வெளியிடப்பட்டுள்ள பயண நேர அட்டவணையைப் பின்பற்றி நடக்கும் படி

வாகனமோட்டிகளை அவர் கேட்டுக் கொண்டார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.