ECONOMY

அம்பாங் ஜெயாவில் வாகன நிறுத்தக் கட்டணமாக வெ.20 லட்சம் வசூல்

21 ஏப்ரல் 2023, 3:59 AM
அம்பாங் ஜெயாவில் வாகன நிறுத்தக் கட்டணமாக வெ.20 லட்சம் வசூல்

ஷா ஆலம், ஏப் 21- இவ்வாண்டு ஜனவரி முதல் ஏப்ரல் 17ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் தனது அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதிகளில் கார் நிறுத்த கட்டணமாக 20 லட்சம் வெள்ளியை  வசூலித்துள்ளது.

அந்த தொகையில் 838,000 வெள்ளி பிரத்தியேக கார் நிறுத்தமிடங்களை வாடகைக்கு விடுவதன் மூலம் பெறப்பட்டவையாகும் என்று நகராண்மைக் கழகத் தலைவர் முகமது பவுஸி முகமது யாத்திம் கூறினார்.

மேலும் 88,000 வெள்ளி மாதாந்திர பாஸ் மூலமாகவும் 78,000 வெள்ளி குடியிருப்பாளர் மாதாந்திர பாஸ் மூலமாகவும் கிடைக்கப்பெற்றன என்றார் அவர்.

இவை தவிர, இயங்கலை வாயிலான கட்ட முறையின் வழி மேலும் 10 லட்சம் வெள்ளி வசூலிக்கப்பட்ட என்று நகராண்மைக் கழகத்தின் மாதாந்திரக் கூட்டத்தில் உரையாற்றிய போது அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.