ECONOMY

மே மாதம் மாபெரும் வேலை வாய்ப்புச் சந்தை- சிலாங்கூர் அரசு ஏற்பாடு

1 ஏப்ரல் 2023, 4:18 AM
மே மாதம் மாபெரும் வேலை வாய்ப்புச் சந்தை- சிலாங்கூர் அரசு ஏற்பாடு

ஷா ஆலம், ஏப் 1-  மாநில அரசின் வருடாந்திர நிகழ்வான கார்னிவெல் கெர்ஜாயா எனும் வேலை வாய்ப்புச் சந்தை வரும் மே மாத மத்தியில் மிகப்பெரிய அளவில் நடைபெறவுள்ளதாக  மனித மூலதன மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது கைருடின் ஓத்மான் கூறினார்.

இந்த வேலை வாய்ப்புச் சந்தை செர்டாங், மலேசிய விவசாய கண்காட்சி பூங்காவில் (மேப்ஸ்) நடைபெறும் என்றும் இந்த இரண்டு நாள் சந்தையில் சுமார் 200 முதலாளிகள் கலந்து கொண்டு 30,000 வேலை வாய்ப்புகளை வழங்குவர் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த வேலை வாய்ப்புச் சந்தையில் சுற்றுலா, உற்பத்தி ஹோட்டல், உபசரணை துறைகளோடு மாற்றுத் திறனாளிகளுக்கும் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்று அவர் சொன்னார்.

இந்த கார்னிவெல் கெர்ஜாயா வாய்ப்புச் சந்தை நடைபெறவிருக்கும் தேதியை நாங்கள் விரைவில் அறிவிப்போம். வேலை தேடுவோர் முன்கூட்டியே தங்களின்  சுய விபரக்குறிப்புகளை தயார் செய்து கொள்ளாம் என அவர் குறிப்பிட்டார்.

இதற்கு முன்னர் நடத்தப்பட்ட வேலை வாய்ப்புச் சந்தை பொது மக்களின் அமோக ஆதரவைப் பெற்றது. இச்சந்தையில் பங்கேற்றவர்களில் 1,060 பேர் பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்பினைப் பெற்றனர்.

வகைeconomy

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.