நிபாங் திபால், பிப் 18 - நாளை தொடங்கி மார்ச் 15ஆம் தேதி வரை நடைபெறும் எஸ்.பி.எம். தேர்வின் போது வெள்ளம் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கான ஏற்பாடுகளை கல்வி அமைச்சு செய்துள்ளது.தேர்வின் போது ஏற்படும் வெள்ளம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் சமாளிக்க அமைச்சின் வெள்ள செயல்பாட்டு அறை மற்றும் அனைத்து மாநில கல்வித் துறைகளும் (ஜேபிஎன்) முழு தயார் நிலையில் இருப்பதாக அதன் அமைச்சர் ஃபாட்லினா சீடேக் கூறினார்.
அனைத்து மாநில கல்வி இலாகாக்களும் தயாராக உள்ளன. குறிப்பாக கிழக்குக் கரை மாநிலங்கள் வெள்ளத்தை எதிர்கொண்ட அனுபவத்தைக் கொண்டவை. எங்கள் பள்ளிகளும் தேர்வு மையங்களாகவும் வெள்ள நிவாரண மையங்களாகவும் செயல்படத் தயாராக உள்ளன என்றார் அவர்.
இங்குள்ள நிபோங் திபால் தமிழ்ப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் தொகுதியில் உள்ள ஐந்து தேசிய வகை தமிழ்ப் பள்ளிகளுக்கு நேஷன்கேட் நிறுவனத்தின் ஆரம்பகால பள்ளிக்கல்வி உதவித் திட்ட நிகழ்வில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார். இந்நிகழ்வில் அந்நிறுவனம் 150 மாணவர்களுக்கு 12,000 வெள்ளியை நன்கொடையாக வழங்கியது.
இதற்கிடையில், சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி கட்டுமானத் திட்டம் கைவிடப்பட்டதை கல்வியமைச்சு கவனத்தில் கொண்டுள்ளதாக நிபோங் திபால் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் பாட்லினா சொன்னார்.
இதனால் மாணவர்களின் பெற்றோர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறிய அவர், இந்த பிரச்சினையை தாமே கவனத்தில் எடுத்துக்கொண்டதாகவும், பள்ளியின் கட்டுமானம் நிர்ணயிக்கப்பட்ட அட்டவணையைப் பின்பற்றுவதை உறுதி செய்யவுள்ளதாகவும் சொன்னார்
நிதிப் பற்றாக்குறையால் இத்திட்டம் ஓராண்டுக்கு முன் கைவிடப்பட்டது.
ECONOMY
எஸ்.பி.எம். தேர்வின் போது வெள்ள அபாயம்- தயார் நிலையில் கல்வியமைச்சு
18 பிப்ரவரி 2023, 9:28 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
சிறந்த பொருளாதார மையமாக உருமாறும் லங்காவி
Shalini Rajamogun
29 ஜூன் 2026

selangor
மேற்கு ஆசிய மோதல்களுக்கு இடையிலும் மக்களின் நல்வாழ்வைப் பாதுகாக்கும் சிலாங்கூர் அரசு
Shalini Rajamogun
22 ஜூன் 2026

national
ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட்டாலும் அவசரப்பட்டு முதலீட்டு முடிவுகளை எடுக்க வேண்டாம் - பொருளாதார நிபுணர் அறிவுறுத்தல்
Shalini Rajamogun, Suhaila Shahrul Annuar
18 ஜூன் 2026

national
மலேசியாவின் பணவீக்கம் 1.5 முதல் 2.5 விழுக்காட்டிற்குள் கட்டுப்படுத்தப்படும்; பொருளாதார அமைச்சு நம்பிக்கை
Shalini Rajamogun
15 ஜூன் 2026

வகைnational
உங்கள் கருத்து என்ன?



