HEALTH

நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை 325ஆக உயர்வு

2 பிப்ரவரி 2023, 7:04 AM
நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை 325ஆக உயர்வு

ஷா ஆலம், பிப் 2- நாட்டில் நேற்று மொத்தம் 325 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் இரண்டு வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களிடம் அடையாளம் காணப்பட்டது.

நேற்றைய நிலவரப்படி நாட்டில 9,887 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றின் தீவிரப் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதைச் சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கத்தின் தரவுகள் காட்டுகின்றன.

அவர்களில் 9,597 பேர் அல்லது 96.1 விழுக்காட்டினர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பி.கே.ஆர்.சி. எனப்படும் கோவிட்-19 நோயாளிகளுக்கான தடுப்பு மற்றும் சிகிச்சை மையங்களில் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

மேலும் 376 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வரும் வேளையில் அவர்களில் 14 பேர் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நோய்த் தொற்றிலிருந்து நேற்று 113 பேர் குணமடைந்தனர். இதனுடன் சேர்த்து இந்நோயிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 49 லட்சத்து 90 ஆயிரத்து 79ஆக உயர்ந்துள்ளது.

கோவிட்-19 நோய்த் தொற்றுடன் தொடர்புடைய மரணச் சம்பவங்கள் நேற்று பதிவு செய்யப்படவில்லை. இந்நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36,942ஆக உள்ளது.

வகைhealth

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.