HEALTH

கோவிட்-19 நோயினால் நேற்று 309 பேர் பாதிப்பு- மரணங்கள் பதிவாகவில்லை

23 ஜனவரி 2023, 4:04 AM
கோவிட்-19 நோயினால் நேற்று 309 பேர் பாதிப்பு- மரணங்கள் பதிவாகவில்லை

ஷா ஆலம், ஜன 23- நாட்டில் கோவிட்-19 நோய் தொற்று எண்ணிக்கை

தொடர்ந்து 500க்கும் கீழ் பதிவாகி வருகிறது. நேற்று இந்நோயினால் 309

பேர் பாதிக்கப்பட்டனர்.

கோவிட்-19 நோய் தொடர்புடைய மரணச் சம்பவங்கள் நேற்று

பதிவாகவில்லை என்று சுகாதார அமைச்சின் கே.கே.எம்.நாவ் அகப்பக்கம்

கூறியது.

நேற்றைய நிலவரப்படி நாட்டில் 10,337 பேர் கோவிட்- 19 நோய்த் தொற்றின்

தீவிர பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர். அவர்களில் 9,943 பேர் அல்லது 96.2

விழுக்காட்டினர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் 381 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்ற வரும்

வேளையில் அவர்களில் 13 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்

அனுமதிக்கப்படுள்ளனர். பத்து நோயாளிகளுக்கு செயற்கை சுவாசக் கருவி

பொருத்தப்பட்டுள்ளது.

கோவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து நேற்று 292 பேர் குணமடைந்தனர்.

வகைhealth

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.