புத்ராஜெயா, ஜன 21- கடந்த 2022 ஆம் ஆண்டிற்கான மலேசிய கல்விச் சான்றிதழ் (எஸ்.பி.எம்.) தேர்வு ஜனவரி 30 முதல் மார்ச் 15 வரை நடைபெறும். அறிவியல் செய்முறைத் தேர்வு, பேச்சுத் தேர்வு, கேட்கும் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வுஆகியவற்றை இது உள்ளடக்கியிருக்கும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
வரும் பிப்ரவரி 20 முதல் மார்ச் 15 வரை நடைபெறும் எழுத்துத் தேர்வை மொத்தம் 403,637 மாணவர்கள் எழுதுவார்கள் என்று ஒரு அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
ஜனவரி 30 ஆம் தேதி நடைபெறும் அறிவியல் நடைமுறைத் தேர்வை (இயற்பியல்)
93,490 மாணவர்களும் 31ஆம் தேதி நடைபெறும் அறிவியல் நடைமுறைத் தேர்வை (உயிரியல்) 74,642 மாணவர்களும் பிப்ரவரி 2ஆம் தேதி நடைபெறும் அறிவியல் நடைமுறைத் தேர்வை (வேதியியல்) 94,672 மாணவர்களும் பயிற்சி அறிவியல் (கூடுதல் அறிவியல்) தேர்வை 2,675 மாணவர்களும் எழுதுவார்கள்.
பிப்ரவரி 7 முதல் 9 வரை நடைபெறும் பேச்சுத் தேர்வில் (மலாய்) 397,854 விண்ணப்பதாரர்கள் பங்கேற்கும் அதே வேளையில் 13 முதல் 15 வரை நடைபெறும் ஆங்கில பேச்சுத் தேர்வில் 397,057 பேர் பங்கேற்பர்.
இந்த தேர்வு சுமூகமான முறையில் நடைபெறுவதை உறுதிப்படுத்துவதற்காக மொத்தம் 131,318 தேர்வு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் மொத்தம் 3,355 தேர்வு மையங்களில் இத்தேர்வுகள் நடைபெறும்.
தேர்வு கால அட்டவணையை தேர்வு வாரிய இணையதளத்தின் http://lp.moe.gov.my என்ற இணைப்பில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ECONOMY
2022 ஆம் ஆண்டிற்கான எஸ்.பி.எம். தேர்வு ஜனவரி 30இல் தொடங்கும்
21 ஜனவரி 2023, 3:30 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
RS-2: சிலாங்கூரின் வளர்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் சமமாக இருக்க வேண்டும் – பொருளியல் நிபுணர்
lau sook may
2 செப்டெம்பர் 2026

selangor
சிலாங்கூர் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்த வர்த்தக சமூகத்துடன் கலந்துரையாடல்
Media Selangor Team
18 ஆகஸ்ட் 2026

national
தாமதமாகும் திருமணம் , அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு; பிறப்பு விகிதம் குறையக் காரணம்
Bernama
17 ஆகஸ்ட் 2026

national
அக்டோபரில் சிலாங்கூர் சர்வதேச வணிக உச்சிமாநாடு (SIBS); 7 முக்கிய அம்சங்களுடன் ஏற்பாடு
Shalini Rajamogun
14 ஜூலை 2026

வகைeconomy
உங்கள் கருத்து என்ன?



