HEALTH

குறைந்து வருகிறது கோவிட்-19 நோய் தொற்று- நேற்று 227 பேர் பாதிப்பு, அறுவர் மரணம்

17 ஜனவரி 2023, 3:19 AM
குறைந்து வருகிறது கோவிட்-19 நோய் தொற்று- நேற்று 227 பேர் பாதிப்பு, அறுவர் மரணம்

ஷா ஆலம், ஜன 17- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை

தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று இந்நோயினால் நாடு முழுவதும்

227 பேர் பாதிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 242 ஆக

இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று பதிவான நோய்த் தொற்றுகளில் நான்கு வெளிநாடுகளிலிருந்து

வந்தவர்களிடம் அடையாளம் காணப்பட்டதாகச் சுகாதார அமைச்சின்

கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

நேற்றைய தொற்றுகளுடன் சேர்த்து நாட்டில் இந்நோய்க்கு

ஆளானவர்களின் மொத்த எண்ணிக்கை 50 லட்சத்து 32 ஆயிரத்து 904 ஆக

உயர்ந்துள்ளது.

கோவிட்-19 தொடர்பு மேலும் ஆறு மரணச் சம்பவங்கள் நேற்று பதிவாகின.

அவற்றில் இரண்டு மருத்துவமனைக்குக் கொண்டு வருவதற்கு முன்னரே

உறுதி செய்யப்பட்ட மரணங்களாகும்.

இதனிடையே , இந்நோய்த் தொற்றின் பாதிப்பு காரணமாக 457 பேர்

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 21 பேர் தீவிர

சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள வேளையில் ஒன்பது பேருக்குச்

செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.