ECONOMY

கார் நிறுத்துமிடக் குற்றங்களுக்கு இன்று 30 விழுக்காடு வரை கழிவு- எம்.பி.எஸ்.ஏ. வழங்குகிறது

20 டிசம்பர் 2022, 6:59 AM
கார் நிறுத்துமிடக் குற்றங்களுக்கு இன்று 30 விழுக்காடு வரை கழிவு- எம்.பி.எஸ்.ஏ. வழங்குகிறது

ஷா ஆலம், டிச 20- இன்று நடைபெறும் வாடிக்கையாளர் தினத்தை முன்னிட்டு 2007 ஆம் ஆண்டு எம்.பி.எஸ்.ஏ. சாலை போக்குவரத்து விதிகளின் கீழ் கார் நிறுத்துமிட குற்றங்களுக்கான அபராதத் தொகையில் 30 விழுக்காடு வரை கழிவு வழங்க ஷா ஆலம் மாநகர் மன்றம் முன்வந்துள்ளது.

இங்குள்ள செக்சன் 9, பிளாசா ஷா ஆலமில் இன்று காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும் இந்த வாடிக்கையாளர் தினத்தில் இந்த அபராதத் தொகை குறைப்பு சலுகை வழங்கப்படுவதாக மாநகர் மன்றம் கூறியது.

இந்த வாடிக்கையாளர் தினத்தில் மதிப்பீட்டு வரியைச் சரிபார்த்து செலுத்துவது, கார் நிறுத்துமிட அபராதங்களைச் செலுத்துவது, வீடுகளை சீரமைப்பு செய்வது தொடர்பான விண்ணப்பங்களை நிலையை அறிந்து கொள்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள முடியும் என அது தெரிவித்தது.

மேலும், மாநகர் மன்றத்தின் சேவைகள் தொடர்பில் பொதுமக்கள் தங்களின் கருத்துகளையும் பரிந்துரைகளையும் இந்த நிகழ்வில் முன்வைக்கலாம் என்று மாநகர் மன்றம் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.