ECONOMY

சீனப் புத்தாண்டு 2023யை முன்னிட்டு ஷாப்பிங் வவுச்சர்கள் - பண்டார் உத்தாமா மாநிலத் தொகுதி

20 டிசம்பர் 2022, 6:52 AM
சீனப் புத்தாண்டு 2023யை முன்னிட்டு ஷாப்பிங் வவுச்சர்கள் - பண்டார் உத்தாமா மாநிலத் தொகுதி

ஷா ஆலம், டிச 20 - சீனப் புத்தாண்டு 2023யை முன்னிட்டு ஷாப்பிங் வவுச்சர்களுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதிக்குள் பண்டார் உத்தாமா மாநில தொகுதியில் வசிப்பவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்பட்டுள்ளனர்.

சீனப் புத்தாண்டை கொண்டாடும் மற்றும் RM3,000 க்கும் குறைவான மாத வருமானம் ஈட்டும் தொகுதி வாக்காளர்களுக்கு   இவ் விண்ணப்பங்கள் திறக்கப்பட்டுள்ளன என மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் ஜமாலியா ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.

"இருப்பினும், காசே இபு ஸ்மாட் சிலாங்கூர் (Kasih Ibu Smart Selangor) பந்துவான் கெய்டுபான் செஜாத்தரா சிலாங்கூர் (Bantuan Kehidupan Sejahtera Selangor) மற்றும் ஸ்கிம் மெஸ்ரா உசிய ஏமாஸ் (Skim Mesra Usia Emas) ஆகிய உதவிகளைப் பெறுவோர் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க இயலாது" என்று அவர் முகநூல் பதிவில் தெரிவித்தார்.

ஒரு குடும்பத்திற்கு ஒரு விண்ணப்பதாரர் மட்டுமே வவுச்சர்களை பெற தகுதியுடையவர் என்றும், விண்ணப்பதாரர் அவர்களின் அடையாள அட்டை மற்றும் சம்பளச் சீட்டின் நகலைச் வழங்க வேண்டும் என்றும் ஜமாலியா கூறினார்.

"ஷாப்பிங் வவுச்சர்களுக்கான ஒதுக்கீடுகள் குறைவாகவே உள்ளன, அதனால், முழுமையான விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். மேலும் தகவலுக்கு, 03-7726 0441 அல்லது 011-3934 1073 (WhatsApp) என்ற எண்ணின் மூலம் தொடர்பு கொள்ளவும்,” என அவர் கேட்டு கொண்டார்.

விண்ணப்பப் படிவத்தை tiny.cc/CNY2023BUயில் பதிவிறக்கம் செய்யலாம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.