ECONOMY

வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய வேளாண் தொழில்முனைவோருக்கு வெ. 50,000 வரை கடனுதவி

28 நவம்பர் 2022, 5:39 AM
வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய வேளாண் தொழில்முனைவோருக்கு வெ. 50,000 வரை கடனுதவி

ஷா ஆலம், நவ. 28-  விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள தொழில்முனைவோர் தங்கள் தொழிலை மேம்படுத்த ஐ-அக்ரோ கடனுதவித் திட்டத்தின் வழி 50,000 வெள்ளி வரை பெற விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இத்திட்டத்திற்கு  microcredit.selangor.gov.my  எனும் அகப்பக்கம் வாயிலாக  அல்லது 19 ஹிஜ்ரா கிளைகளில் உள்ள நிதி அதிகாரிகள் மூலம் விண்ணப்பம் செய்யலாம் என்று சிலாங்கூர் ஹிஜ்ரா அறவாரியம் கூறியது.

ஐ-அக்ரோ கடனுதவித் திட்டத்தின் மூலம் ஹிஜ்ரா வழங்கும்  50,000 வெள்ளி  கடனுதவி விவசாய தொழில்முனைவோர் துரித வளர்ச்சி காண உதவும் என அந்த வாரியம் தனது பேஸ்புக் பதிவில் கூறியது.

இந்த கடனுதவித் திட்டதிற்கு விண்ணப்பம் செய்வதற்கான நிபந்தனைகள் வருமாறு-

  • மலேசிய குடிமகன் இருக்க வேண்டும்
  • சிலாங்கூர் பிரஜைகளாக  அல்லது ஐந்தாண்டுகளுக்கு மேல் சிலாங்கூரில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும்
  • சிலாங்கூரில் வாக்காளராக இருக்க வேண்டு
  • மனுதாரர் வயது 18 முதல் 65க்குள் இருக்க வேண்டும்
  • வர்த்தகம் செயல்பாட்டில் இருக்க வேண்டும்
  • செல்லத்தக்க வணிக உரிமம் அல்லது லைசென்சை கொண்டிருக்க வேண்டும்.

கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரை  மொத்தம் 5,795 தொழில்முனைவோர் ஹிஜ்ராவிடமிருந்து 9 கோடியே 23 லட்சத்து  ஆயிரம் 

வெள்ளியை கடனுதவியாகப் பெற்றுள்ளனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.