ECONOMY

கோம்பாக்கில் மக்களின் வெற்றி- கடமையை திறம்பட ஆற்றுவேன்- அமிருடின் வாக்குறுதி

20 நவம்பர் 2022, 4:41 AM
கோம்பாக்கில் மக்களின் வெற்றி- கடமையை திறம்பட ஆற்றுவேன்- அமிருடின் வாக்குறுதி

ஷா ஆலம், நவ 20- மக்கள் தமக்கு வழங்கியுள்ள அதிகாரத்தைக் கொண்டு மக்களுக்கு இயன்றவரை திறம்பட சேவையாற்றவுள்ளதாக கோம்பாக் தொகுதியில் வெற்றி பெற்ற ஹராப்பான் வேட்பாளரான டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

கோம்பாக் தொகுதியை மூன்று தவணைகளாக தன் வசம் வைத்திருந்த டத்தோஸ்ரீ அஸ்மின் அலியை வீழ்த்தி தொகுதியைக் கைப்பற்ற உதவிய தொகுதி வாக்காளர்களுக்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் சொன்னார்.

எனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தையும் பொறுப்புகளையும் என்னால் முடிந்த வரை சிறப்பான முறையில் நிறைவேற்றுவேன் என அவர் தெரிவித்தார்.

இது தன்மானமிக்க மற்றும் சிறப்பான கோம்பாக் தொகுதியின் உருவாக்கத்திற்கான  மக்களின் வெற்றியாகும் என்று தனது பேஸ்புக் பதிவில் அவர் குறிப்பிட்டார்.

நான்கு முனைப் போட்டியில் 12,729 வாக்குகள் பெரும்பான்மையில் முகமது அஸ்மினை தோற்கடித்த தன் வழி கிடைத்த இந்த வெற்றியை பக்கத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு தாம் சமர்ப்பணம் செய்வதாக அவர் கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.