ECONOMY

ஹராப்பான் கூட்டணியின் மாபெரும் பிரசாரக் கூட்டம் தாமான் கிராமாட்டில் நாளை நடைபெறும்

15 நவம்பர் 2022, 4:35 AM
ஹராப்பான் கூட்டணியின் மாபெரும் பிரசாரக் கூட்டம் தாமான் கிராமாட்டில் நாளை நடைபெறும்

ஷா ஆலம், நவ 15- ஹராப்பான் கூட்டணி தனது  மாபெரும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தை தாமான் கிராமாட், ஏயு1 எம்.பி.ஏ.ஜே. திடலில் நாளை புதன் கிழமை இரவு 8.00 மணிக்கு நடத்தவுள்ளது.

கித்தா போலே எனும் கருப்பொருளில் ஹராப்பான் செயலாக்க மையம் ஏற்பாடு செய்துள்ள இந்த பிரசாரக் கூட்டத்தில் ஹராப்பான் கூட்டணியின் உயர்மட்டத் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

ஹராப்பான் கூட்டணியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அமானா கட்சித் தலைவர் முகமது சாபு, ஜசெக தலைமைச் செயலாளர் அந்தோணி லோக் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் முக்கியத் தலைவர்களாவர்.

மேலும், சிலாங்கூர் மாநில கெஅடிலான் தலைவர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, கெஅடிலான் துணைத் தலைவர் ரபிஸி ரம்லி ஆகியோரும் இந்த பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுவர்.

இந்த பேரணி பக்கத்தான் ஹராப்பான் அதிகாரப்பூர் பேஸ்புக் மூலம் நேரடி ஒளிபரப்ப செய்யப்படும்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.