ECONOMY

ஆரம்ப வாக்காளர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றத் தொடங்கினர்

15 நவம்பர் 2022, 4:28 AM
ஆரம்ப வாக்காளர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றத் தொடங்கினர்

கோலாலம்பூர், நவ 15- பதினைந்தாவது பொதுத் தேர்தலில் முன்கூட்டியே வாக்களிப்பதற்கான தகுதி பெற்ற 224,828 பேர் இன்று காலை 8.00 மணி முதல் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றத் தொடங்கினர்.

இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களின் அவர்களின் வாழ்க்கைத் துணையை உள்ளடக்கிய 117,373 பேரும் போலீஸ் துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கைத் துறையை உள்ளடக்கிய மேலும் 107,355 பேரும் இந்த ஆரம்ப வாக்களிப்பில் கலந்து கொள்கின்றனர்.

இந்த தொடக்க வாக்களிப்பு மையங்கள் நண்பகல் தொடங்கி மாலை 5.00 மணி வரை கட்டம் கட்டமாக மூடப்படும் என்று தேர்தல் ஆணையத்தின் அகப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோவிட்-19 நோய்த் தொற்று கண்ட வாக்காளர்கள் தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்கு ஏதுவாக மாவட்ட சுகாதார அதிகாரிகளைத் தொடர் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.