அம்பாங், நவ 11: மூன்று முறை பத்து தீகா சட்டமன்றத்தில் சிறப்பாக மக்கள் சேவையில் ஈடுபட்டு வரும் ரோட்சியா இஸ்மாயிலை அம்பாங் நாடாளுமன்றத்தில் தனது சேவையை தொடர கட்சி ஊக்குவித்தது.
பக்காத்தான் ஹராப்பான் முன்னால் வேட்பாளர், கெஅடிலான் மக்கள் கட்சியின் உயர்மட்ட தலைமை, பதவியில் இருந்தவர் கட்சியை விட்டு வெளியேறிய பிறகு, இங்கு மக்களுக்கு சேவையாற்ற ஒருவர் தேவை. அவர் திறமையானவர் மக்களுக்கு உழைக்கும் அர்ப்பணிப்பு குணம் கொண்டவராக நம்பிக்கைக்கு உரியவராக இருக்க வேண்டும் என கட்சி எதிர்பார்த்தது.
அதனால் அப்பணியை ஏற்றுக் கொள்ள கட்சி எனக்கு ஆணையிட்டது, "எனக்கு கொடுத்த கடமைகளை செய்யாதவள் அல்ல நான்! இம்முறை அம்பாங் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற கட்சியின் கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
நான் பத்து தீகா தொகுதியில் வழங்கிய சேவையால் மூன்று முறை தொடர்ந்து தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளேன், நான் நம்பி ஓட்டு போட்ட வாக்காளர்களுக்கோ, கட்சிக்கோ துரோகம் இழைக்கவில்லை. மக்கள் நம்பிக்கையை காற்றில் பறக்க விட வில்லை என்றார் அவர்.
நாடாளுமன்ற உறுப்பினராக தனது பணி எளிதானது அல்ல என்பதை ஒப்புக் கொண்டார், ஆனால் அவர் தன்னால் முடிந்ததை செய்யத் தயாராக இருப்பதாக ரோட்சியா நேற்று இங்கு அருகில் உள்ள அம்பாங் சம்புரானில் வாக்காளர்களை சந்தித்த பின்னர் கூறினார்.
"பத்து தீகாவில் நான் தோல்வி அடைந்திருந்தால், எனக்கு மூன்று முறை ஒரே இடத்தில் வெற்றி கிடைத்திருக்காது. உண்மையில் தோல்வி கண்டவர்களே கீழ்த்தரமான செயல்களில் துரோகங்களில், கட்சித் தாவல்களில் ஈடுபடுகின்றனர். அவர்கள் தான் (தோல்வி கண்டவர்கள்) என்று அவர்களிடம் சொல்ல வேண்டும், நான் அல்ல," என்று அவர் மீண்டும் கூறினார்.
ஒன்பது முனைகள் கொண்ட போட்டியில் பார்ட்டி பங்சா மலேசியா சார்பில் போட்டியிடும் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினரான ஜூரைடா கமாருடினை எதிர்த்து ரோட்சியா களம் காண்கிறார்



