ECONOMY

தீபாவளியை முன்னிட்டு ஸ்ரீ செர்டாங் தொகுதியில் 350 பேருக்கு இலவச பற்றுச்சீட்டுகள் விநியோகம். 

17 அக்டோபர் 2022, 6:31 AM
தீபாவளியை முன்னிட்டு ஸ்ரீ செர்டாங் தொகுதியில் 350 பேருக்கு இலவச பற்றுச்சீட்டுகள் விநியோகம். 
தீபாவளியை முன்னிட்டு ஸ்ரீ செர்டாங் தொகுதியில் 350 பேருக்கு இலவச பற்றுச்சீட்டுகள் விநியோகம். 

ஷா ஆலம், அக் 17- விரைவில் கொண்டாடப்பட விருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஸ்ரீ செர்டாங் தொகுதியைச் சேர்ந்த 350 வசதி குறைந்த குடும்பத்தினருக்கு

100 ரிங்கிட்டுக்கான இலவச பற்றுச்சீட்டுகள் அண்மையில் வழங்கப்பட்டன.

ஸ்ரீ கெம்பாங்கான் ஜெயண்ட் பேரங்காடியில் நடைபெற்ற இந்த பற்றுச்சீட்டு விநியோக நிகழ்வுக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் தலைமை தாங்கினார்.

தீபாவளிக்கான முன்னேற்பாடுகளை செய்வதற்கு உண்டாகும் செலவுகளைக் குறைப்பதில் இந்த உதவித் தொகை ஓரளவு துணை புரியும் என தாம் நம்புவதாக அவர் தனது பேஸ்புக் பதிவில் கூறினார்.

பெருநாளைக் கொண்டாடும் வசதி குறைந்தவர்களுக்கு உதவும் நோக்கிலும் சமூகத்தின் நலன் காக்கும் நீண்ட காலத் திட்டத்தின் அடிப்படையிலும் இந்த ஜோம் ஷோப்பிங் பற்றுச்சீட்டு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாண்டில் அனைத்து பெருநாள் கொண்டாட்டங்களின் போதும் ஜோம் ஷோப்பிங் பற்றுச்சீட்டுகளை விநியோகிப்பதற்காக மாநில அரசு 80 லட்சம் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது. அதில் 33 லட்சத்து 40 ஆயிரம் வெள்ளி கடந்த மே மாதம் கொண்டாடப்பட்ட நோன்புப் பெருநாளுக்கு பயன்படுத்தப்பட்டது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.