ECONOMY

இன்ஃப்ராசெல் ஏற்பாட்டில் மேலும் இரு சாலைகள் சீரமைப்பு

3 அக்டோபர் 2022, 4:42 AM
இன்ஃப்ராசெல் ஏற்பாட்டில் மேலும் இரு சாலைகள் சீரமைப்பு

ஷா ஆலம், அக் 3- சாலை பராமரிப்பு நிறுவனமான இன்ஃப்ராசெல்  சென். பெர்ஹாட் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி கோம்பாக் மற்றும் கோல சிலாங்கூர் மாவட்டங்களில் மேலும் இரண்டு பழுதடைந்த சாலைகளை சீரமைத்தது.

டிவிட்டர் வழி  பொதுமக்களிடமிருந்து புகார் கிடைக்கப்  பெற்ற 24 மணி நேரத்திற்குள் இரு சாலைகளும் செப்பனிடப்பட்டதாக அந்நிறுவனம் கூறியது.

கோம்பாக் மாவட்டத்தின்  ஜாலான் செலாயாங்-கெப்போங்,  மற்றும் கோல சிலாங்கூர் மாவட்டத்தின் பத்து 53, ஜாலான் லாமா சிலாங்கூர்  ஆகியவையே சீரமைக்கப்பட்ட  அவ்விரு சாலைகளாகும் என அது தெரிவித்தது.

அதற்கு முந்தைய நாள்  தஞ்சோங் காராங், ஜாலான் ஹெட்வொர்க்கில் செம்மண் மூலம் சாலையோரங்களில் உள்ள பள்ளங்களை மூடி சமன்படுத்தும் பணியை  இன்ஃப்ராசெல் மேற்கொண்டது.

சேதமடைந்த சாலைகள் தொடர்பான தகவல்களை #namajalan #daerah என்ற ஹேஷ்டேக்குடன் டிவிட்டரில்  பதிவேற்றம் செய்வதன் மூலம் பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.