ஷா ஆலம், செப் 23: மாநில அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட அடிப்படைப் பொருட்கள் மலிவான விற்பனைத் திட்டம் எட்டு மாநில சட்டமன்றங்களில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை தொடரும்.
டத்தாரான் தொங்காக் 9 (சுங்கை பஞ்சாங் சட்டமன்றம்), ஜாலான் பாகான் (சிகிஞ்சான்), புசாட் டேசா கம்போங் சுங்கை குலாங்- குலாங் மற்றும் புசாட் டேசா கம்போங் ராஜா மூசா(பெர்மாத்தாங்), பிளாட் தாமான் பக்தி (பாண்டான் இன்டா), தெராத்தாய் ஃபுட் கோர்ட் (தெராத்தாய்), மஸ்ஜிட் ராஜா மூடா மூசா (செமினி), பசார் தானி தலம் (கோத்தா டமான்சாரா), பார்க்கிங் தாமான் தாசிக் செக்சன் 7 (கோத்தா அங்கெரிக்) ஆகிய இடங்களில் மக்கள் ஏசான் விற்பனை திட்டம் நடைபெறும்.
சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டு கழகத்தினால் நிர்வகிக்கப்படும் இந்த திட்டத்தில் கோழி, மாட்டு இறைச்சி, மீன், கோழி முட்டை, அரிசி மற்றும் சமையல் எண்ணெய் உள்ளிட்ட ஆறு அடிப்படைப் பொருட்கள் சந்தையை விட 30 விழுக்காடு குறைவான விலையில் விற்கப்படுகிறது. இத்திட்டம் இந்த ஆண்டு இறுதி வரை மாநிலம் முழுவதும் நடைபெறும்.



