ECONOMY

புத்ரா ஹைட்ஸ் பள்ளிவாசலை சிலாங்கூர் சுல்தான் திறந்து வைத்தார்

23 செப்டெம்பர் 2022, 4:33 AM
புத்ரா ஹைட்ஸ் பள்ளிவாசலை சிலாங்கூர் சுல்தான் திறந்து வைத்தார்

ஷா ஆலம், செப்ட் 23: இங்குள்ள புத்ரா ஹைட்ஸ் பள்ளிவாசலை மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் நேற்று அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.

இந்த பள்ளிவாசலில் நடைபெற்ற மக்ஹ்ரிப் மற்றும் இஷ்யாக் தொழுகைகளிலும் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் 500 பேருடன் கலந்து கொண்டார்.

சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, மாநில அரசு செயலாளர் டத்தோ ஹரிஸ் காசிம், சிலாங்கூர் முஃப்தி டத்தோ டாக்டர் அன்ஹார் ஒப்பீர், சிலாங்கூர் இஸ்லாமிய சமய மன்றத் தலைவர் டான்ஸ்ரீ  அப்துல் அஜிஸ் முகமது யூசுப் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இரண்டு கோடி வெள்ளி மதிப்பிலான இந்த பள்ளிவாசலின் வாசலின் கட்டுமானப் பணி கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கி இவ்வாண்டு ஏப்ரல் மாதம் முற்றுப் பெற்றது. இந்த பள்ளிவாசலில் ஒரே நேரத்தில் 5,000 பேர் வரை தொழுகை நடத்த முடியும்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.