ECONOMY

டீம் சிலாங்கூர் ஏற்பாட்டில் பந்தாய் ரெமிஸ் நோக்கி வாகன அணி-120 பேர் பங்கேற்பு

23 செப்டெம்பர் 2022, 4:30 AM
டீம் சிலாங்கூர் ஏற்பாட்டில் பந்தாய் ரெமிஸ் நோக்கி வாகன அணி-120 பேர் பங்கேற்பு

ஷா ஆலம், செப் 23- டீம் சிலாங்கூர் ஏற்பாட்டில் கடந்த 18 ஆம் தேதி நடைபெற்ற பந்தாய் ரெமிஸ் கடற்கரைக்கான வாகன அணியில் 120 மோட்டார் சைக்கிளோட்டிகள் கலந்து கொண்டனர்.

மலேசிய தினத்தை முன்னிட்டு நாட்டுப் பற்றை வளர்க்கும் நோக்கில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டதாக டீம் சிலாங்கூர் அமைப்பின் தலைமை செயலக அதிகாரி ஷியாய்ஸெல் கெமான் கூறினார்.

குவாங், காஜாங், கோல குபு பாரு, பாத்தாங் காலி ஆகிய இடங்களிலிருந்து புறப்பட்ட இந்த மோட்டார் சைக்கிள் அணியினர் காலை 10.00 மணியளவில் பந்தாய் ரெமிஸ் வந்து சேர்ந்ததாக அவர்  சொன்னார்.

இது தவிர, இங்கு நடைபெற்ற 20 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட சைக்கிள் பயணத்திலும் 55 பேர் பங்கேற்றதாக அவர் குறிப்பிட்டார்.

டீம் சிலாங்கூர், ரேலா மற்றும் போலீசாரின் வழிகாட்டுதலுடன் அந்த சைக்கிளோட்ட அணியினர் கிராம சாலைகள் வழியாக தங்கள் பயணத்தை மேற்கொண்டனர் என்றார் அவர்.

இதனைத் தொடர்ந்து புக்கிட் மெலாவத்தி சட்டமன்ற உறுப்பினர் ஜூவாய்ரியா ஜூல்கிப்ளி தலைமையில் பந்தாய் ரெமிஸ் கடற்கரையைச் சுத்தப்படுத்தும் இயக்கம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.