ECONOMY

பக்கத்தான் ஹராப்பான் மாநாடு அக்டோபர் 29இல் பேராக்கில் நடைபெறும்

22 செப்டெம்பர் 2022, 9:46 AM
பக்கத்தான் ஹராப்பான் மாநாடு அக்டோபர் 29இல் பேராக்கில் நடைபெறும்

ஷா ஆலம், செப் 22- பக்காத்தான் ஹராப்பான் (ஹராப்பான்) மாநாடு அக்டோபர் 29 ஆம் தேதி பேராக்கில் நடைபெற உள்ளது.

நேற்று நடைபெற்ற அந்த கூட்டணியின் தலைவர் மன்றக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவை அதன் தகவல் பிரிவுத் தலைவர்  தியோ நீ சிங் அறிவித்தார்.

வரும் அக்டோபர் 29 ஆம் தேதி பேராக்கில்  ஹராப்பான் மாநாட்டை நடத்த நேற்று கூடிய ஹராப்பான் தலைமைத்துவ மன்றம் முடிவு செய்துள்ளது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த மாநாட்டின் இயக்குநராக பேராக் மாநில  டிஏபி தலைவர் ஙா கோர் மிங் செயல்படுவார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், ஹராப்பான் கூட்டணியின் பிரசார பயணத் தொடரும், முக்கியத் தலைவர்களின் உரையும் மாநாட்டுக்கு முதல் நாள் நடைபெறும் என நீ சிங் சொன்னார்.

பதினைந்தாவது பொதுத் தேர்தலை எதிர் கொள்வதற்கு ஏதுவாக பொதுமக்களை அணுகுவதை இலக்காக கொண்ட இத்திட்டம் தம்புன், லுமுட், தாப்பா மற்றும் பாரிட் புந்தார் ஆகிய நாடாளுமன்றத் தொகுதிகளில் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.