ECONOMY

தென் சிலாங்கூர் வளர்ச்சி கண்காணிப்பு குழு, எழும் சிக்கல்களை கையாள்கிறது

22 செப்டெம்பர் 2022, 6:43 AM
தென் சிலாங்கூர் வளர்ச்சி கண்காணிப்பு குழு, எழும் சிக்கல்களை கையாள்கிறது

ஷா ஆலம், செப்டம்பர் 22: முதல் சிலாங்கூர் திட்டத்தில் (RS-1) திட்டமிடப்பட்ட தெற்கு சிலாங்கூர் ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பகுதியை (IDRISS) கண்காணிக்க பணிக்குழு நிறுவப்பட்டது.

டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, அடையாளம் காணப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவதற்கான ஒருங்கிணைப்பாளராக குழு செயல்படுகிறது என்றார்.

"எழும் பிரச்சினைகளின் தீர்வுக்கான வழிகளை ஆராய்வதிலும் அவை பங்கு வகிக்கின்றன. இயற்கையின் பராமரிப்பினை மையமாகக் கொண்டு வளர்ச்சி செயல்முறை நிலையானதாக மேற்கொள்ளப்படும்.

"அமைக்கப்பட்ட குழு முன்மொழியப்பட்ட வளர்ச்சித் திட்டத்தை செயல்படுத்துவது கண்காணிக்கும் மற்றும் குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளின் நலன்கள் பாதுகாக்கப்படுவதும் உறுதி செய்யும்" என்று அவர் பேஸ்புக் மூலம் கூறினார்.

IDRISS மூலம் சிப்பாங் மற்றும் கோலா லங்காட்டில் வளர்ச்சி நடவடிக்கைகள் மற்றும் அதிக தாக்கம் மற்றும் அதிக மதிப்புள்ள முதலீடுகளை ஊக்குவிக்கும் பணியை சிலாங்கூர் கொண்டுள்ளது என்றார்.

"இந்த மேம்பாடானது தனியார் முதலீட்டு உந்துதல் மொத்த வளர்ச்சி (GDV)  RM1 திரில்லியன் மதிப்பீட்டினை கொண்டுள்ளது.

"மாநிலத்தின் செழிப்புக்காக இந்த வளர்ச்சி சிறப்பாக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய மாநில அரசு அனைத்து முயற்சிகளையும் எடுக்கும்," என்று அவர் கூறினார்.

40,000 ஏக்கர் பரப்பளவில் RM1 திரில்லியன் மதிப்புடையதாக மதிப்பிடப்பட்ட IDRISS மூலம் சிப்பாங் மற்றும் கோலா லங்காட் பொருளாதார பலன்களைப் பெறும் என்று கடந்த ஜூலை மாதம், RS-1 இன் விளக்கக்காட்சியின் போது அமிருடின் அறிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.