ECONOMY

சுக்மா 2022- பளுதூக்கும் போட்டி நாளைக்கு ஒத்தி வைப்பு

19 செப்டெம்பர் 2022, 4:25 AM
சுக்மா 2022- பளுதூக்கும் போட்டி நாளைக்கு ஒத்தி வைப்பு

கோலாலம்பூர், செப் 19- இருபதாவது மலேசிய போட்டியின் (சுக்மா) ஒரு அங்கமாக இன்று நடைபெறவிருந்த பளுதூக்கும் போட்டி ஒத்தி வைக்கப்பட்டு நாளை 20 ஆம் தேதி நடத்தப்படவிருக்கிறது.

மலேசிய விளையாட்டு மன்றத்தின் தலைமை இயக்குநர் டத்தோ அகமது ஷபாவி இஸ்மாயில் தலைமையில் நேற்றிரவு நடைபெற்ற சுக்மா போட்டியின் நுட்பக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டது.

இவ்வாண்டு சுக்மா போட்டியில் பளுதூக்கும் போட்டி புத்ரா ஜெயா, பிரிசிண்ட் 11, காம்ப்ளெக்ஸ் கெஜிரானானில் இன்று தொடங்கி நான்கு நாட்களுக்கு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த போட்டியில் 16 தங்கப் பதக்கங்களை குறிவைத்து போட்டியாளர்கள் களம் காண்கின்றனர்.

வகைsukankini

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.