ECONOMY

நஜிப், ரோஸ்மாவுக்கு வழங்கப்பட்ட விருதுகளை சிலாங்கூர் சுல்தான் மீட்டுக் கொண்டார்

12 செப்டெம்பர் 2022, 9:40 AM
நஜிப், ரோஸ்மாவுக்கு வழங்கப்பட்ட விருதுகளை சிலாங்கூர் சுல்தான் மீட்டுக் கொண்டார்

ஷா ஆலம், செப் 12-  முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மற்றும் அவரின் துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோருக்கு வழங்கப்பட்ட விருதுகளை மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் மீட்டுக் கொண்டார்.

சிலாங்கூர் அரச மன்றத்துடன் விவாதித்த பிறகு சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அவ்விருவரின் விருதுகளை மீட்டுக் கொள்ள உத்தரவிட்டதாக மாநில அரசு செயலாளரும் சிலாங்கூர் மாநில விருதுகளுக்கான பதிவதிகாரியுமான டத்தோ ஹாரிஸ் காசிம் தெரிவித்தார்.

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் நஜிப் மற்றும் ரோஸ்மா ஆகியோருக்கு நீதிமன்றம் தண்டனை அளித்ததைத் தொடர்ந்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.