ECONOMY

இந்த வார இறுதியில் கோத்தா கெமுனிங், ஸ்ரீ கெம்பாங்கனில் இலவச மருத்துவ பரிசோதனை

7 செப்டெம்பர் 2022, 9:23 AM
இந்த வார இறுதியில் கோத்தா கெமுனிங், ஸ்ரீ கெம்பாங்கனில் இலவச மருத்துவ பரிசோதனை
இந்த வார இறுதியில் கோத்தா கெமுனிங், ஸ்ரீ கெம்பாங்கனில் இலவச மருத்துவ பரிசோதனை

ஷா ஆலம், செப்டம்பர் 7: மாநில அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட இலவச மருத்துவ பரிசோதனை திட்டம் செப்டம்பர் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் பெட்டாலிங்கைச் சுற்றியுள்ள இரண்டு இடங்களில் நடைபெறுகிறது.

சனிக்கிழமை, கோத்தா கெமுனிங்கில் உள்ள வெண்ணிலா மண்டபத்திலும், ஞாயிற்றுக்கிழமை, ஸ்ரீ கெம்பாங்கனில் உள்ள சுபாங் ஜெயா புத்ரா பெர்மாய் நகர சபையின் பல்நோக்கு மண்டபத்திலும் இத்திட்டம் நடைபெறும்.

பொது சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினரின் படி, சிலாங்கூர் சாரிங் திட்டம் பொதுமக்களுக்கு உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் மார்பக புற்றுநோய் போன்ற ஆரம்பகால நோய்களைக் கண்டறிய உதவுகிறது.

"நீங்கள் பெட்டாலிங்கிற்கு அருகில் வசிக்கிறீர்கள் என்றால், பட்டியலிடப்பட்டுள்ள இடத்தில் சிலாங்கூர் சாரிங் திட்டத்தில் இலவசமாக உடல்நலப் பரிசோதனை செய்துகொள்ளலாம்" என்று டாக்டர் சித்தி மரியா மாமூட் பேஸ்புக்கில் தெரிவித்தார்.

பதிவு முறைகள் பின்வருமாறு:

  1. செலங்கா செயலியைப்பதிவிறக்கவும்
  2. சிலாங்கூர் சாரிங்பட்டனை அழுத்தவும்
  3. கேள்வித்தாளைநிரப்பவும்
  4. இடம்மற்றும் தேதியைத் தேர்வு செய்யவும்

மேலும் தகவலுக்கு, https://selangorsaring.selangkah.my/ ஐப் பார்வையிடவும்.

வகைhealth

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.