ECONOMY

ஷா ஆலம் மால் கார் நிறுத்துமிடத்தில் ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் நடமாடும் முகப்பிடச் சேவை

2 செப்டெம்பர் 2022, 9:35 AM
ஷா ஆலம் மால் கார் நிறுத்துமிடத்தில் ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் நடமாடும் முகப்பிடச் சேவை

ஷா ஆலம், செப் 2- ஷா ஆலம் மாநகர் மன்றம் இங்குள்ள செக்சன் 9, ஷா ஆலம் மால் கார் நிறுத்துமிடத்தில் நடமாடும் முகப்பிடச் சேவையை நாளை ஏற்பாடு செய்துள்ளது.

“ஷா ஆலம் ஓன் வீல்ஸ்“ எனும் இந்த சேவை காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும் என்று மாநகர் மன்றம் தனது பேஸ்புக் பதிவில் கூறியது.

இந்த நடமாடும் முகப்பிடத்தில் மதிப்பீட்டு வரியை சரிபார்த்து செலுத்துவது, கார் நிறுத்துமிட அபராதக் கட்டணத்தைச் செலுத்துவது, வர்த்தக உரிமத்திற்கான விண்ணப்பங்களின் நிலையைக் கண்டறிவது மற்றும் புகார்களைப் பெறுவது போன்ற சேவைகள் வழங்கப்படும்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.