ECONOMY

சாங்கி விமான நிலைய 4ஆம் முனையத்திலிருந்து ஏர் ஆசியா சேவையைத் தொடரும்

1 செப்டெம்பர் 2022, 7:18 AM
சாங்கி விமான நிலைய 4ஆம் முனையத்திலிருந்து ஏர் ஆசியா சேவையைத் தொடரும்

சிங்கப்பூர், செப் 1- இம்மாதம்  15 ஆம் தேதி தொடங்கி சாங்கி விமான நிலையத்தின் நான்காம் முனையத்திலிருந்து தனது பயணச் சேவையை ஏர் ஆசியா நிறுவனம் மீண்டும் தொடரும்

ஏர் ஆசியா நிறுவனத்தினால் நடத்தப்படும் ஏர் ஆசிய மலேசியா, ஏர் ஆசியா தாய்லாந்து, ஏர் ஆசியா இந்தோனேசியா, ஏர் ஆசியா பிலிப்பைன்ஸ் நிறுவனங்களின் புறப்படும் மற்றும் தரையிறங்கும் நடவடிக்கைகள் இனி அந்த விமான நிலையத்தின் நான்காம் முனையத்திலிருந்து மேற்கொள்ளப்படும் என்று ஏர் ஆசியா நிறுவனக் குழுமம் கூறியது.

இந்த நடவடிக்கையினால் விமானங்கள் புறப்படுவது மற்றும் தரையிறங்குவதில் எந்த இடையூறும் ஏற்படாது என்றும் அந்நிறுவனம் வாக்குறுதியளித்தது.

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக சாங்கி விமான நிலையத்தின் நான்காம் முனைய நடவடிக்கைகள் கடந்த 2020 மே மாதம் முதல் முற்றிலுமாக முடக்கப்பட்டன.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.