ECONOMY

வார இறுதியில் மூன்று இடங்களில் இலவச மருத்துவ பரிசோதனை

29 ஆகஸ்ட் 2022, 7:36 AM
வார இறுதியில் மூன்று இடங்களில் இலவச மருத்துவ பரிசோதனை

ஷா ஆலம், ஆக 29- சிலாங்கூர் மாநில அரசின் இலவச மருத்துவப் பரிசோதனை இயக்கம் வார இறுதியில் மூன்று இடங்களில் நடைபெறவுள்ளது.

கோல குபு பாரு மற்றும் பாத்தாங் காலி தொகுதி நிலையிலான இலவச மருத்துவ பரிசோதனை இயக்கம் வரும் செப்டம்பர் 3 ஆம் தேதி ராசா, கம்போங் சுவாங்கில் நடைபெறும்.

காஜா தொகுதி நிலையிலான இலவச மருத்துவப் பரிசோதனை வரும் 4 ஆம் தேதி உலு லங்காட், சவுஜானா இம்பியான், டேவான் ஸ்ரீ செம்பாக்காவிலும் தஞ்சோங் சிப்பாட் தொகுதிக்கான மருத்துவப் பரிசோதனை கம்போங் குண்டாங், டேவான்  ஸ்ரீ குண்டாங்கிலும் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறும் இந்த மருத்துவ பரிசோதனை இயக்கத்தில் கலந்து கொள்ள விரும்புவோர் செலங்கா செயலி வாயிலாக முன்பதிவு  செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மாநிலத்தில் அனைத்து தொகுதிகளிலும் இலவச மருத்துவப் பரிசோதனையை மேற்கொள்ள மாநில அரசு 34 லட்சம் வெள்ளியை ஒதுக்கியுள்ளது. நோய்ப் பின்னணி கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், உடல் பருமனானவர்கள் மற்றும் ஆரோக்கிய வாழ்க்கை முறையைக் கடைபிடிக்காதவர்களை இலக்காக கொண்டு இந்த மருத்துவ பரிசோதனை இயக்கம் மேற்கொள்ளப்படுகிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.