ECONOMY

15வது பொதுத் தேர்தலில் ஒரே சின்னத்தை ஹராப்பான் பயன்படுத்தும்

25 ஆகஸ்ட் 2022, 3:03 AM
15வது பொதுத் தேர்தலில் ஒரே சின்னத்தை ஹராப்பான் பயன்படுத்தும்

ஷா ஆலம், ஆக 25- வரும் 15வது பொதுத் தேர்தலில் புதிய வடிவமைப்புடன் கூடிய ஒரே சின்னத்தில் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி போட்டியிடும்.

நேற்று நடைபெற்ற மாதாந்திரக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட பல்வேறு முடிவுகளில் இதுவும் அடங்கும் என்று அக்கூட்டணியின் தலைவர் மன்றம் கூறியது.

பதினைந்தாவது பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஏதுவாக ஒருங்கிணைப்பு மீதான அம்சங்களில் பக்கத்தான் கவனம் செலுத்தும் என அறிக்கை ஒன்றில் அக்கூட்டணி தெரிவித்தது.

வரும் பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான் ஒரே சின்னத்தில் போட்டியிடும். அது பக்கத்தான் ஹராப்பான் சின்னமாகும். 15வது பொதுத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளுக்கு புதிய உத்வேகத்தையும் தோற்றத்தையும் அளிக்க புதிய வடிவிலான சின்னத்தை அறிமுகப்படுத்துவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்று அவ்வறிக்கை குறிப்பிட்டது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.