ஷா ஆலம், ஆக 9- டீம் சிலாங்கூர் தன்னார்வலர் அமைப்பு கோல லங்காட் நகராண்மைக் கழகத்துடன் இணைந்து பந்தாய் பத்து லாவுட் கடற்கரையில் துப்புரவு இயக்கத்தை வரும் சனிக்கிழமை மேற்கொள்ளவுள்ளது.
‘கோத்தோங் ரோயோங் பெர்டானா‘ எனும் இந்த துப்புரவு இயக்கத்திற்கு தஞ்சோங் சிப்பாட் சட்டமன்றத் தொகுதி சேவை மையமும் ஆதரவு வழங்கியுள்ளது.
தொகுதி சட்டமன்ற உறுப்பினர் போர்ஹான் அமான் ஷா சுமார் எண்பது தன்னார்வலர்களுடன் இணைந்து பந்தாய் பத்து லாவுட் கடற்கரையை துப்புரவு செய்யும் பணியில் ஈடுபடுவார் என அந்த அமைப்பு தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளது.
சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமலும் அழிந்து விடாமலும் இருப்பதை உறுதி செய்ய கடற்கரையை முறையாக பாதுகாப்பது நமது கடமையாகும் என அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த துப்புரவு இயக்கம் காலை 8.30 முதல் நடைபெறும்.







