ECONOMY

சூப்பர் லீக் கால்பந்து போட்டி- நெகிரி எப்.சி.யிடம் சிலாங்கூர் தோல்வி

1 ஆகஸ்ட் 2022, 6:16 AM
சூப்பர் லீக் கால்பந்து போட்டி- நெகிரி எப்.சி.யிடம் சிலாங்கூர் தோல்வி

ஷா ஆலம், ஆக 1- நேற்று இங்கு நடைபெற்ற சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் சிலாங்கூர் எப்.சி. குழு நெகிரி செம்பிலான் எப்.சி. குழுவிடம் -2-3 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது.

பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்ற அரங்கில் நடைபெற்ற இந்த போட்டியின் முதல் பாதியில் 2-0 என்ற கோல் கணக்கில் சிலாங்கூர் அணி முன்னிலை வகித்தது.

மறுபாதி ஆட்டத்தில் தொடர் தாக்குதல்களை நடத்தி கோல் எண்ணிக்கையை சமப்படுத்திய நெகிரி செம்பிலான் அணி ஆட்டத்தின் 89வது நிமிடத்தில் சியான் செல்வராஜ் மூலம் வெற்றி கோலை போட்டது.

சிலாங்கூர் அணியின் கோல்களை ஹெர்லிசன் கோயின் மூலம் ஆட்டத்தின் 8வது நிமிடத்திலும் யாசான் அல் அராப் மூலம் ஆட்டத்தின் 30 நிமிடத்திலும் புகுத்தியது.

இந்த தவணைக்கான சூப்பர் லீக் போட்டியில் இது வரை 16 ஆட்டங்களை ஆடியுள்ள சிலாங்கூர் குழு மொத்தம் 13 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது.

ஜோகூர் டாருள் தர்க்சிம் குழு 32 புள்ளிகளுடன் முதலிடத்திலும் சபா எப்.சி. 31 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் நெகிரி செம்பிலான் குழு 26 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.

வகைsukankini

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.