ECONOMY

கிள்ளான் பள்ளத்தாக்கில் பல இடங்களில் மின் விநியோக தடை ஏற்பட்டது

27 ஜூலை 2022, 8:05 AM
கிள்ளான் பள்ளத்தாக்கில் பல இடங்களில் மின் விநியோக தடை ஏற்பட்டது

ஷா ஆலம், ஜூலை 27: கிள்ளான் பள்ளத்தாக்கு உட்பட பல பகுதிகளில் இன்று மின் விநியோக தடை ஏற்பட்டது.

சிராஸ், சுபாங், அம்பாங், கெப்போங், ஹர்தாமாஸ் மற்றும் புக்கிட் டமன்சாராகோத்தா பாரு, கிளந்தான், குவாந்தான் மற்றும் பகாங் ஆகிய இடங்கள் சம்பந்தப்பட்டதாக பயனர் புகார்களின் அடிப்படையில் மலேசியாகினி அறிக்கை தெரிவித்தது.

இதற்கிடையில், தெனாகா நேஷனல் பெர்ஹாட் (TNB) பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப் பட்டதை உறுதிப்படுத்தியது மற்றும் அதற்கான காரணத்தைக் கண்டறிந்து விநியோகத்தை மீட்டெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

"விநியோக இடையூறுகளின் போது பயனர்கள் அனுபவிக்கும் சிரமத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்" என்று பேஸ்புக் மூலம் ஒரு அறிக்கை தெரிவித்துள்ளது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.