ECONOMY

யு.ஐ.டி.எம். அல்-சுல்தான் அப்துல்லா மருத்துவமனை திறப்பு விழா- சிலாங்கூர் சுல்தான், தெங்கு பெர்மைசூரி பங்கேற்பு

25 ஜூலை 2022, 4:44 AM
யு.ஐ.டி.எம். அல்-சுல்தான் அப்துல்லா மருத்துவமனை திறப்பு விழா- சிலாங்கூர் சுல்தான், தெங்கு பெர்மைசூரி பங்கேற்பு

ஷா ஆலம், ஜூலை 25-  இம்மாதம் 23 ஆம் தேதி நடைபெற்ற புஞ்சா ஆலம், யு.ஐ.டி.எம். அல்-சுல்தான் அப்துல்லா மருத்துவமனையின் திறப்பு விழாவில் சிலாங்கூர் சுல்தான் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷாவும் யு.ஐ.டி.எம். இணைவேந்தரான தெங்கு பெர்மைசூரி நோராஷிகினும் கலந்து கொண்டதாக சிலாங்கூர் அரச பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனையை யு.ஐ.டி.எம். வேந்தரான மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.

மாட்சிமை தங்கிய பேரரசியார் துங்கு அஜிசா அமினா மைமுனா இஸ்கந்தரியாவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

சுமார் 46 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்ட இந்த அல்-சுல்தான் அப்துல்லா மருத்துவமனை கடந்த 2020 ஆண்டில் முழுமையடைந்தது. ஸாம் ஸாம் நீரின் மூலக்கூறுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த மருத்துவமனை வடிவமைக்கப்பட்டுள்ளது.

சிலாங்கூர் மற்றும் தென்பேராக் வட்டாரத்தைச் சேர்ந்த சுமார் 15 மக்களுக்கு இந்த மருத்துவமனை மருத்துவ சேவையை வழங்கும்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.