ECONOMY

சூப்பர் லீக் போட்டி- சிலாங்கூர் எப்.சி – கே.எல்.சிட்டி 1-1 கோல் கணக்கில் சமநிலை

21 ஜூலை 2022, 4:04 AM
சூப்பர் லீக் போட்டி- சிலாங்கூர் எப்.சி – கே.எல்.சிட்டி 1-1 கோல் கணக்கில் சமநிலை

ஷா ஆலம், ஜூலை 21- கிளானா ஜெயாவிலுள்ள பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்ற அரங்கில் நேற்றிரவு நடைபெற்ற சூப்பர் லீக் போட்டியில் சிலாங்கூர் எப்.சி மற்றும் கே.எல்.சிட்டி ஆகிய குழுக்கள் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை கண்டன.

ரெட் ஜெயண்ட் என அழைக்கப்படும் சிலாங்கூர் குழுவின் கோலை அதன் கேப்டனர் பிரெண்டன் கான் ஆட்டத்தின் 37 நிமிடத்தில் போட்ட வேளையில் கே.எல். சிட்டி குழுவின் கோலை இறக்குமதி ஆட்டக்காரர் ரோமெல் மோராலேஸ் ஆட்டத்தின் 68வது நிமிடத்தில் புகுத்தினார்.

இரு முறை மஞ்சள் அட்டைகளும் அதனைத் தொடர்ந்து சிவப்பு அட்டையும் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து சிலாங்கூர் குழுவின் ஆட்டக்காரர் அகமது ஜிக்ரி காலில் ஆட்டத்தின் மறுபாதியில் திடலை விட்டு வெளியேற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து 10 விளையாட்டாளர்களுடன் ஆட்டத்தை தொடர வேண்டிய நிர்ப்பந்தம் சிலாங்கூர் குழுவுக்கு ஏற்பட்டது.

கே.எல். சிட்டி ஆட்டக் காரர் ஜோர்டன் மிந்தாவை சிலாங்கூரின் ஷாருள் நஸீம் தள்ளிவிட்டதைத் தொடர்ந்து கே.எல்.சிட்டி குழுவுக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. எனினும், ரோமேல் மோராலெஸ் அடித்த பந்தை கோல் காவலர் சேம் சோமன்விலி வெற்றிகரமாகத் தடுத்து அக்குழுவின் வெற்றி வாய்ப்பினைத் தகர்த்தார்.

லீக் போட்டியில் சிலாங்கூர் குழு 16 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ள வேளையில் கே.எல். சிட்டி குழு 15 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் உள்ளது.

வகைsukankini

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.