ECONOMY

இந்த ஞாயிற்றுக்கிழமை ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் பெட்டாலிங் ஜெயாவில் நடைபெறும்

19 ஜூலை 2022, 4:56 AM
இந்த ஞாயிற்றுக்கிழமை ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் பெட்டாலிங் ஜெயாவில் நடைபெறும்

ஷா ஆலம், ஜூலை 19: மக்களுக்கான பல்வேறு புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட திட்டங்களை அறிமுகப்படுத்தும் ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் ஜூலை 24 அன்று பெட்டாலிங்கில் நடைபெறவுள்ளது.

பெடுலி ராக்யாட் திட்டத்தின் (ஐ.பி.ஆர்.) மறுசீரமைப்பாக விளங்கும் இந்த சிலாங்கூர் பென்யாயாங் திட்டம் பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றத்தின் போலவார்ட் சதுக்கத்தில் காலை 8.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும்.

மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அவர்களால் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கப்படும் இந்த நிகழ்வில் கலைநிகழ்ச்சி ஏரோபிக், சமையல் போட்டி, மலர் அலங்காரம், கண்காட்சி, மக்கள் விளையாட்டு விற்பனை போன்ற நிகழ்வுகள் நடைபெறும்.

மாநில அரசின் திட்டங்கள் வாயிலாக மேலும் அதிகமானோர் பயன்பெறும் வகையில் 35 கோடி வெள்ளி நிதி ஒதுக்கீட்டில் இத்திட்டத்தை மாநில அரசு அமல்படுத்தியுள்ளது.

மக்கள் மத்தியில் கடுமையான நோய்களுக்கான அறிகுறியை முன்கூட்டியே கண்டறிவதற்கு ஏதுவாக 15 லட்சம் வெள்ளி செலவில் சிலாங்கூர் சாரிங் திட்டத்தையும் மாநில அரசு மாநிலத்தின் அனைத்து தொகுதிகளிலும் நடத்தி வருகிறது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.