ECONOMY

சிப்பாங் நகராண்மைக் கழக ஏற்பாட்டில் வாகனமில்லா தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்படும்

19 ஜூலை 2022, 4:17 AM
சிப்பாங் நகராண்மைக் கழக ஏற்பாட்டில் வாகனமில்லா தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்படும்

ஷா ஆலம், ஜூலை 19- வரும் சனிக்கிழமை அனுசரிக்கப்படவிருக்கும் வாகனமில்லா தினத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் பொது மக்களும் அதில் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிகழ்வு அதிகாலை 6.30 மணி முதல் காலை 8.30 மணி வரை பி.பி.எஸ்.டி வாக் பண்டார் பாரு சாலாக் திங்கியில் நடைபெறும் என்று நகராண்மைக் கழகத் தலைவர் டத்தோ அப்துல் ஹமிட் ஹூசேன் கூறினார்.

கடந்த முறை இந்த நிகழ்வை சைபர் ஜெயா ஏரியில் நடத்தினோம். இம்முறை, பல்வேறு சுவர் ஓவியங்களால் மெருகூட்டப்பட்டுள்ள பி.பி.எஸ்.டி. பகுதியை இந்நிகழ்வின் மூலம் பிரபலப்படுத்த விரும்புகிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.

ஆகவே, சிப்பாங் வட்டார மக்கள் வார இறுதி நாளை சிறப்பான முறையில் கழிப்பதற்கு ஏதுவாக இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம் என்று அவர் சொன்னார்.

இந்த வாகனமில்லா தினத்தை முன்னிட்டு பாரம்பரிய நடனங்கள், மருத்துவ பரிசோதனை, வர்ணம் தீட்டும் போட்டி, போலீஸ் மற்றும் தீயணைப்புத் துறையின் கண்காட்சி ஆகிய அங்கங்களும் இடம் பெறும் என்றார் அவர்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.