ECONOMY

அம்பாங் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் நிறுத்துமிட வசதி- எம்.பி.ஏ.ஜே. ஏற்பாடு

12 ஜூலை 2022, 10:53 AM
அம்பாங் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் நிறுத்துமிட வசதி- எம்.பி.ஏ.ஜே. ஏற்பாடு

ஷா ஆலம், ஜூலை 12- அம்பாங் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வாகனங்களை நிறுத்துவதற்கான சிறப்பு இட வசதியை அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் ஏற்படுத்தி தந்துள்ளது.

அந்த மருத்துவமனையின் அருகில் ஆம்புலன்ஸ் வாகனங்களை நிறுத்துவதற்கு ஏதுவாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாக நகராண்மைக் கழகம் கூறியது.

அம்பாங் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வாகனங்களை நிறுத்தும் இடங்களை நகராண்மைக் கழகத்தின் வாகன நிறுத்துமிடம் மற்றும் மோண்மைச் சேவை பிரிவு ஏற்படுத்தி தந்துள்ளது.

அந்த பிரத்தியேக இடங்களில் தங்களை வாகனங்களை நிறுத்தவோ அவ்விடங்களுக்கு இடையூறை ஏற்படுத்தவோ வேண்டாம் என பொது மக்களை கேட்டுக் கொள்கிறோம் என்று தனது பேஸ்புக் பக்கத்தில் அது கூறியது.

வகைhealth

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.