ECONOMY

ஜூலை 2 ஆம் தேதி தஞ்சோங் காராங்கில் ஹராப்பான் விளக்கக் கூட்டம்- அன்வார் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

30 ஜூன் 2022, 4:55 AM
ஜூலை 2 ஆம் தேதி தஞ்சோங் காராங்கில் ஹராப்பான் விளக்கக் கூட்டம்- அன்வார் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

ஷா ஆலம், ஜூன் 30- வரும் ஜூலை 2 ஆம் தேதி தஞ்சோங் காராங், கம்போங் பெர்மாத்தாங் திடலில் நடைபெறவிருக்கும் பொதுக் கூட்டத்தில் பக்கத்தான் ஹராப்பான் தலைவர்கள் கலந்து கொண்டு நாட்டின் நடப்பு நிலவரம் குறித்து விளக்கமளிப்பார்கள்.

இரவு 8.00 மணிக்கு தொடங்கும் இந்த சிலாங்கூர் ஹராப்பான் பயணத் தொடரில் கெஅடிலான் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அமானா கட்சித் தலைவர் மாட் சாபு, ஜசெக பொதுச் செயலாளர் அந்தோணி லோக் ஆகியோர் கலந்து கொள்வர்.

சிலாங்கூர்  மந்திரி புசாரும் மாநில கெஅடிலான் தலைமைத்துவ மன்றத்தின் தலைவருமான டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, ஜசெக தேசிய துணைத் தலைவர் கோபிந்த் திங் டியோ, சிலாங்கூர் அமானா தலைவர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் ஆகியோரும் இந்த விளக்கக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.

மோரிப்பில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இதே போன்ற நிகழ்வில் டத்தோஸ்ரீ அன்வார் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. குறைந்த வருமானம் பெறும் தரப்பினரின் நலன் காக்கப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் அக்கூட்டத்தில் வலியுறுத்தியிருந்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.