ECONOMY

ஷா ஆலம், கம்போங் புக்கிட் நாகாவில் வரும் சனியன்று மாநில அரசின் மலிவு விற்பனை

17 ஜூன் 2022, 4:01 AM
ஷா ஆலம், கம்போங் புக்கிட் நாகாவில் வரும் சனியன்று மாநில அரசின் மலிவு விற்பனை

ஷா ஆலம், ஜூன் 17- அத்தியாவசிய உணவுப் பொருள்களை சந்தையைக் காட்டிலும் மலிவான விலையில் விற்கப்படும் ஏசான் விற்பனை பயணம் வரும் சனிக்கிழமை இங்குள்ள கம்போங் புக்கிட் நாகா, அல்-பக்ரி பள்ளிவாசல் கார் நிறுத்துமிடத்தில் நடைபெறும்.

காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை நடைபெறும் இந்த மலிவு விற்பனைத் திட்டத்தில் கோழி, மீன், இறைச்சி, பழங்கள் மற்றும் காய்கறிகள் விற்பனைக்கு வைக்கப்படும் என்று சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம் (பி.கே.பி.எஸ்.) கூறியது.

துண்டுகளாக்கப்பட்ட கோழி 800 கிராம் 10.00 வெள்ளி விலையிலும் 2 கிலோ 25 வெள்ளி விலையிலும் விற்கப்படும். பி கிரேட் ஒரு தட்டு 12.00 வெள்ளி விலையிலும் கெம்போங் மற்றும் செலயாங் மீன் கிலோ 8.00 வெள்ளி விலையிலும் விற்கப்படும்.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் தொடங்கி மாநிலத்தின் 50 இடங்களில் நடத்தப்பட்ட மலிவு விற்பனை திட்டத்தின் வழி 60,000 குடும்பங்கள் பயனடைந்ததாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த மே 19 ஆம் தேதி கூறியிருந்தார்.

பொது மக்களின் சுமையைக் குறைக்கும் நோக்கிலும் கோழி, மீன், இறைச்சி, முட்டை மற்றும் காய்கறிகளின் விநியோகம் போதுமான அளவில் இருப்பதை உறுதி செய்யும் நோக்கிலும் இந்த மலிவு விற்பனைத் திட்டத்தை மாநில அரசு ஏற்பாடு செய்தது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.