ECONOMY

மலேசிய மாஸ்டர்ஸ் பூப்பந்து போட்டிக்கான டிக்கெட்டுகள் இன்று முதல் விற்பனை

16 ஜூன் 2022, 4:40 AM
மலேசிய மாஸ்டர்ஸ் பூப்பந்து போட்டிக்கான டிக்கெட்டுகள் இன்று முதல் விற்பனை

கோலாலம்பூர், ஜூன் 16- மலேசியா மாஸ்டர்ஸ் பூப்பந்து போட்டியைக் காண விரும்பும் ரசிகர்கள் இன்று பிற்பகல் 2.00 மணி முதல் அதற்கான டிக்கெட்டுகளை வாங்கலாம்.

இருபது வெள்ளி முதல் 460 வெள்ளி வரையிலான இந்த டிக்கெட்டுகளை https://my.bookmyshow.com  எனும் அகப்பக்கம் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம் என மலேசிய பூப்பந்து சங்கம் கூறியது.

இந்த மாஸ்டர்ஸ் பூப்பந்து போட்டி வரும் ஜூலை மாதம் 5 முதல் 10 வரை புக்கிட் ஜாலில் அக்ஸியாத்தா அரேனாவில் நடைபெறும். இந்த போட்டியில் உலகின் தலைசிறந்த விளையாட்டாளர்கள் பங்கேற்கின்றனர்.

மலேசிய பொது பூப்பந்து போட்டிக்கு கொடுத்த அதே ஆதரவை இந்த மாஸ்டர்ஸ் பூப்பந்துப் போட்டிக்கும் மலேசிய ரசிகர்கள் கொடுப்பார்கள் எனத் தாங்கள் எதிர்பார்ப்பதாக மலேசிய பூப்பந்து சங்கத்தின் பொதுச் செயலாளர் டத்தோ கென்னி கோ கூறினார்.

அனைத்துலகத் தரத்திலான இந்த மலேசிய மாஸ்டர்ஸ் பூப்பந்துப் போட்டி 360,000 அமெரிக்க டாலர் ( 16 லட்சம் மலேசிய ரிங்கிட்) பரிசுத் தொகையை வழங்குகிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.