ECONOMY

பெட்டாலிங் மாவட்டத்தின் 47 இடங்களில்  செவ்வாய்க்கிழமை நீர் விநியோகத் தடை

16 ஜூன் 2022, 4:23 AM
பெட்டாலிங் மாவட்டத்தின் 47 இடங்களில்  செவ்வாய்க்கிழமை நீர் விநியோகத் தடை

ஷா ஆலம், ஜூன் 16- பெட்டாலிங் வட்டாரத்தின் 47 இடங்களில் அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை அட்டவணையிடப்படாத நீர் விநியோகத் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நீர் விநியோகத் தடையை கருத்தில் கொண்டு போதுமான அளவு நீரை சேகரித்து வைத்துக் கொள்ளும்படி அவ்வட்டார மக்களை பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

வரும் ஜூன் 21 ஆம் தேதி காலை 9.00 மணி தொடங்கி 24 மணி நேரத்திற்கு இந்த நீர் விநியோகத் தடை அமலில் இருக்கும் என்று அந்நிறுவனம் தனது முகநூல் பதிவில் கூறியது.

புக்கிட் டிங்கில் நீர் சேகரிப்பு குளத்தில் நீர் விநியோக முறையை மேம்படுத்தும் நோக்கில் இந்த நீர் விநியோகத் தடை அமல்படுத்தப்படுவதாக அது குறிப்பிட்டது.

ஜூன் 22 ஆம் தேதி காலை 9.00 மணிக்கு நீர் விநியோகம் முழுமையாக வழக்க நிலைக்கு திரும்பும். குடும்பத் தேவைக்கு போதுமான நீரை சேகரித்து வைக்கும் அதே வேளையில் நீரை மூடியும் வைக்கும்படி பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.