ECONOMY

கே.எல். சென்ட்ரல்-ஸ்கைபார்க் லிங்க் தடத்திற்கான இரயில் கட்டணம் குறைப்பு

10 ஜூன் 2022, 4:57 AM
கே.எல். சென்ட்ரல்-ஸ்கைபார்க் லிங்க் தடத்திற்கான இரயில் கட்டணம் குறைப்பு

ஷா ஆலம், ஜூன் 10 - கே.எல். சென்ட்ரல் மற்றும் சுபாங்கில் உள்ள ஸ்கைபார்க் முனையம் இடையே ஸ்கைபார்க் இணைப்பு இரயில் சேவையைப் பயன்படுத்தும் பயணிகள் இனி ஒரு நபருக்கு வெ.3.50 மட்டுமே கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

இது முந்தைய 10.00 வெள்ளி கட்டணத்திலிருந்து ஏறக்குறைய 65 விழுக்காடு குறைவாகும் என்று போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ வீ கா சியோங் கூறியதாக தி ஸ்டார் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

இதேபோல், சுபாங் ஜெயா கே.டி.எம். கொம்யூட்டர்  இரயில் நிலையம்   மற்றும் ஸ்கைபார்க் முனையம்  இடையிலான பயணத்திற்கான கட்டணம் வெ.4.50 இல் இருந்து வெ.2.00 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இது தவிர, கே.எல்.சென்ட்ரல் - சுபாங் ஜெயா கே.டி.எம். இரயில் நிலையத்திற்கான  கட்டணம் வெ.4.50 இல் இருந்து வெ.2.60 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண முறை நேற்று  முதல் அமலுக்கு வந்தது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.