ECONOMY

இணைய வாகன விற்பனை நிறுவனத்தை மந்திரி புசார் திறந்து வைத்தார்

8 ஜூன் 2022, 9:59 AM
இணைய வாகன விற்பனை நிறுவனத்தை மந்திரி புசார் திறந்து வைத்தார்

ஷா ஆலம், ஜூன் 8- பெட்டாலிங் ஜெயாவில் பிஜே கார்சம் எனப்படும் மின்னியல் முறையில் வாகன  விற்பனை நிறுவனத்தை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி திறந்து நேற்று திறந்து வைத்தார்.

சிலாங்கூர் மாநில மைந்தரின் உழைப்பால் உருவான இந்த நிறுவனத்தின் விற்பனை 170 கோடி வெள்ளியை எட்டியுள்ளது குறித்து அமிருடின் பெருமிதம் தெரிவித்தார்.

இந்த கார்சம் நிறுவனம் தற்போது தென்கிழக்காசியாவின் மிகப்பெரிய இணைய வாகன விற்பனை நிறுவனமாக விளங்கி வருகிறது.

சிலாங்கூர் அரசின் வணிக நட்புறவு கொள்கையின் வெற்றிக்கு எடுத்துக் காட்டாக இந்த இந்த நிறுவனத்தின் உருவாக்கம் விளங்குகிறது என்று அவர் தனது டிவிட்டர் பதிவில் கூறினார்.

மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவக் கூடிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்க சிலாங்கூர் எப்போதும் தயாராக உள்ளதாக ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் தெரிவித்தார்.

ஆக்க கரமான  மற்றும் புதிய சிந்தனையுடன் போட்டியிடும் லட்சக்கணக்கான சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களால் சிலாங்கூர் மாநிலத்தின் பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது என அவர் குறிப்பிட்டார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.