ECONOMY

பி.கே.என்.என்.எஸ். ஏற்பாட்டில் நோன்புப் பெருநாள் உபசரிப்பு- மந்திரி புசார் சிறப்பு வருகை

19 மே 2022, 9:46 AM
பி.கே.என்.என்.எஸ். ஏற்பாட்டில் நோன்புப் பெருநாள் உபசரிப்பு- மந்திரி புசார் சிறப்பு வருகை

ஷா ஆலம், மே 19- சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகத்தின் (பி.கே.என்.எஸ்.) ஏற்பாட்டில் இங்குள்ள ஷா ஆலம் மாநாட்டு மையத்தில் இன்று நடைபெற்ற நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கலந்து கொண்டார்.

பிற்பகல் 2.00 மணியளவில் இந்நிகழ்வுக்கு வருகை புரிந்த மந்திரி புசாரை பி.கே.என்.எஸ். தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ மாமுட் அப்பாஸ் வரவேற்றார்.

இந்த நிகழ்வில் சிலாங்கூர் தெங்கு லக்ஸ்மணா, தெங்கு சுலைமான் ஷா அல்ஹாஜ் அவர்களும் கலந்து கொண்டார்.

அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம்  ஹஷிம், வீடமைப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில், ஊராட்சி மன்றத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் ஆகியோரும் இந்த பொது உபசரிப்பில் பங்கேற்றனர்.

காலை 11.00 மணி தொடங்கி ஐந்து மணி நேரத்திற்கு நீடித்த இந்த பொது உபசரிப்பு நிகழ்வில் திரளானோர் கலந்து கொண்டனர். விருந்தினர்களை உபசரிப்பதற்காக பல்வேறு வகையான பதார்த்தங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.